கோவை,
கேரள மாநிலம் பாலக்காடு காரகுரிசி பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டி என்பவரின் மகன் அஜித் (33 ).இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆர்டெக் டிரேட் லைன்ஸ் என்ற பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வீட்டிற்கு தேவையான மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள், மாடுலர் கிச்சன் உள்ளிட்ட பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார் .கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவசரமாக பணம் தேவைப்பட்டதால் கணபதி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கத்திடம் 16 லட்சம் ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தருமாறு அஜித் கேட்டிருந்தார். அதன்படி ராஜமாணிக்கம் அவரது நண்பரான கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 லட்சம் ரூபாயையும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி ஒன்பது லட்சம் ரூபாயும் என 16 லட்சம் ரூபாய் கடனை வாங்கிக் கொடுத்தார் . தினமும் 35 ஆயிரம் ரூபாயை அஜித் பணம் கடனாக வாங்கி இருந்த சுப்பிரமணிக்கு திருப்பி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் 12 லட்சம் ரூபாயை அசலுடன் திருப்பி செலுத்தி இருந்தார். மீதம் 4 லட்ச ரூபாய் மட்டுமே தர வேண்டிய இருந்தது . ஆனால் சுப்பிரமணி ராஜமாணிக்கம் சந்திரசேகர் ஆகியோர் 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என அஜித்தை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அஜித்துக்கு சொந்தமான கடைக்கு சுப்பிரமணி, ராஜமாணிக்கம் மற்றும் அவரது நண்பர் சந்திரசேகர் ஆகியோர் அத்துமீறி நுழைந்து அலுவலகத்தில் இருந்த லேப்டாப் ,கம்ப்யூட்டர்கள் ,செல்போன், சிசிடிவி ஹார்ட் டிஸ்க், கதவு ஜன்னல் மற்றும் மாடுலர் கிச்சன் உதிரி பாகங்கள் என 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களையும் அஜித்துக்கு சொந்தமான விலை உயர்ந்த காரையும் திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து அஜித் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர் .
போலீசார் சுப்பிரமணியை நேரில் அழைத்து நடத்திய விசாரணையை தொடர்ந்து சுப்பிரமணி வீட்டில் இருந்த அஜித்துக்கு சொந்தமான விலை உயர்ந்த காரின் சாவியை போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர். அஜித்துக்கு சொந்தமான காரை எடுத்துச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 3 லட்சம் ரூபாயை கொடுத்தால் போதும் என்று அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் தெரிவித்து விட்டு சென்றனர்.
இதை எடுத்து அஜித் மூன்று லட்ச ரூபாயை தயார் செய்து விட்டு அழைத்தபோது சுப்பிரமணி உள்ளிட்டோர் வராமல் இருந்துள்ளனர். இது பற்றிய விபரத்தை அஜித் மாநகர போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் கார் மற்றும் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் என 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றதாக சுப்பிரமணி, ராஜமாணிக்கம், சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் மீதும் கந்து வட்டி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *