கோவை,

கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் மது குடிக்க பணம் கேட்டு மறுத்த ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்ததாக புகாரின் பேரில் 7 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 இங்கு ஆண்கள், பெண்களுக்கான மாணவர்கள் விடுதியும் உள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் முதலாமாண்டு மாணவரிடம் சீனியர் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்த மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி மாதவன், மணி, வெங்கடேசன், தரணிதரன், ஐயப்பன், யாலிஸ் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த தகவல் அறிக்கை கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது .இதை தொடர்ந்து  கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *