
கோவை,
கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் வீட்டில் என்னையே அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கும்பகோணம்அடுத்த திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மதமாற்றம் தொடர்பான வழக்கு என்பதால் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று ராமலிங்கம் கொலை தொடர்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் அதிகாலை 6 மணி முதல் 3 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.