
கோவை,
கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி.எம் நகர் உள்ளது .கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிஎம் ராஜு என்பவர் இந்த இடத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்தார். அதை 40க்கும் மேற்பட்டோர் வாங்கி வீடுகள் கட்டி தற்போது குடியிருந்து வருகின்றனர் .இந்நிலையில் 1988 ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு பகுதியான 43 சென்ட் இடம் ராஜாராம் 1998 ம் ஆண்டு பத்திரம் பதிந்துள்ளதாகவும், அந்த இடம் தங்களுக்கு சொந்தம் என ராஜாராம் என்பவர் மாவட்ட பதிவாளரிடம் தவறான தகவல்களை அளித்து உத்தரவு பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து சிஎம் நகர் பகுதி குடியிருப்போர் விசாரித்த போது தமிழ்நாடு ஹவுசிங் போர்டுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் சி எம் ராஜு என்பவர் விற்பனை செய்தது தெரிய வந்தது .இதை தொடர்ந்து இந்த இடத்தை தங்களுக்கு தருமாறு சிஎம் நகர் பொதுமக்கள் ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சந்தித்து சி எம் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். .அமைச்சரும் இதற்கு தனியாக குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று காலை சி.எம் நகர் பகுதிக்கு வந்தார் .அப்போது பொதுமக்கள் தங்களது பிரச்சினை குறித்த மனுவை அவரிடம் அளித்தனர். தொடர்ந்து இது குறித்த பேசிய அவர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்திய தருவதாக அப்பகுதி பொதுமக்களிடம் உறுதி அளித்துச் சென்றார். அதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அங்கு வந்திருந்த அதிகாரிகளிடம் அவர் கூறிவிட்டு சென்றார்.