கோவை,

இசையில் சாதனை படைத்து வரும் ஏழாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை இடையார்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகதீசன் பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களது இளைய மகன் கார்த்திக் ஸ்ரீ ஹரி (13) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே இசையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவரது பெற்றோர் வடவள்ளி பகுதியில் உள்ள இசை பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இசை பயிற்சி அளித்து வருகின்றனர். தொடர்ந்து ஆர்வமுடன் கற்ற கார்த்திக் ஸ்ரீ ஹரி மாவட்ட அளவிலான பல்வேறு இசை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகிறார். இசை படிப்பில் உள்ள 8 நிலைகளில் தற்போது 6வது நிலையை கார்த்திக் ஸ்ரீ ஹரி பெற்றுள்ளார். சினிமா பாடல்கள் மற்றும் உலக தரத்திலான இசை வடிவங்களை உடனுக்குடன் தனது பியானோவில் இசையாக வெளிப்படுத்தி வருகிறார் .இது குறித்து கார்த்திக் ஸ்ரீ ஹரி கூறும் போது விரைவில் இசையின் அனைத்து நிலைகளையும் கற்றுத் தேர்வு தனியாக இசை ஆல்பம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறினார். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் இசையில் சாதனை படைத்து வருவதை அறிந்த பிரபல இசையமைப்பாளர்கள், கிராமத்து பால் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ஜனார்த்தனன்,  பள்ளி ஆசிரியர்கள் , இசைப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அவரது சகோதரி சினேக மித்ரா உள்ளிட்டோர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *