கணபதியிலிருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராக்காச்சி கார்டன் முன்பு கடந்த 20 நாட்களாக லட்சுமிபுரம், கணக்கன் தோட்டம், எம் கே ஜி நகர், பாலாஜி லேஅவுட், திருவள்ளுவர் நகர், வெள்ளிங்கிரி கவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் கணபதி துடியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ,இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை பேசினார்கள் ,தொடர்ந்து கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரிடம் பேசி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்,ஆனால் மறியல் போராட்டம் செய்த பொதுமக்கள் சாலையின் ஓரத்தில் நின்று 19 வது வார்டு உறுப்பினரும் கோவை மாநகராட்சி மேயருமான கல்பனா ஆனந்தகுமார் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே நாங்கள் கலந்து செல்வோம் என்று கூறி அங்கேயே நின்றிருந்தனர், இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாசர் தொலைபேசி மூலம் காவல்துறையினரிடம் இன்று மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர், கோவை மாநகராட்சி மேயரின் சொந்த வார்டு பகுதியில் குடிநீருக்காக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *