
கோவை,தேசிய மக்கள் நுகர்வோர் அமைப்பு, இந்திய மக்கள் உரிமைகள் அமைப்பு, தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மற்றும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை இணைந்து எலும்பு மூட்டு மற்றும் தண்டுவட சிகிச்சைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புனித தெரசா பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் துவக்கி வைத்தார். முகாமிற்கு தேசிய தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் குமார், மாநிலத் தலைவர் ராஜசேகர் ,மாவட்ட தலைவர் பக்தவச்சலம், மாவட்ட செயலாளர்கள் கோகுலகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். மருத்துவ முகாமில் மாநகரத் தலைவர் தேவராஜ் ,மாநகர செயலாளர் செல்வன் ,மாவட்ட அமைப்பாளர் மைக்கேல்மாறன், மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி 66 வது வார்டு தலைவி மாலதி ,கோவை மாவட்ட தலைவி சுதா, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு தலைவி டாக்டர் சித்ரா உட்பட நிர்வாகிகள் சந்திரசேகர் ,ஷாஃபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.