கோவையில் நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முதல்-அமைச்சர் வருகை

இதற்காக அவர் நாளை மறுநாள்(சனிக்கிழமை) 11-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமானநிலையத்திற்கு வருகிறார். விமான நிலை யத்தில் அவருக்கு ஏராளமான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் காரில் சின்னியம்பாளை யத்தில் உள்ள தனியார் மகாலுக்கு செல்கிறார்.

மாற்று கட்சியினர் இணையும் விழா

அங்கு மாற்றுக்கட்சி யினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில், முன்னாள் எம்.எல்.ஏ. மாற்று கட்சியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொள்கின்றனர். அவர்களை முதல்- அமைச்சர் வரவேற்று பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், காரில் அவர் ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பாராட்டு விழா

பின்னர் மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக கருமத்தம்பட்டிக்கு செல்கிறார்.

கருமத்தம்பட்டியில் விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

விழா முடிந்ததும், கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அன்று இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள். விழா நடைபெறும் இடத்தில் தற்போது பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *