மக்னா யானைைய பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை வருகை

கோவை பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட மக்னா யானை ஒவ்வொரு கிராமமாக கடந்து இன்று கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நிற்கிறது.

கடந்த 3 தினங்களாக ஊருக்குள் சுற்றி திரியும் யானை வனப்பகுதிக்குக்குள் செல்லமால், குடியிருப்புகளுக்குள்ளே சுற்றி திரிந்து வருகிறது. இதையடுத்து மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானையை வரவழைக்க முடிவு செய்தனர்.அதன்படி இன்று பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானையான சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

பின்னர் கும்கி யானை உதவியுடன் யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *