செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,உறுதி மொழி எடுத்து கொள்வதை ஒவ்வொரு செவிலியர் கல்லூரிகளும் மரபாக பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் பி.பி.ஜி.செவிலியர் கல்லூரியில்,செவிலியர் மாணவ,மாணவிகள் 25 வது ஆண்டு விளக்கேற்றும் விழா,கல்லூரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.. நிகழ்ச்சியில் பேசிய அவர், செவிலியர் பணி ஒரு உன்னதமான சேவை எனவும், மருத்துவத் துறையில் மருத்துவர்களை விடவும் செவிலியர்கள் முக்கியமானவர்கள் என தெரிவித்தார்.குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து செவிலியர்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருந்தது என்று குறிப்பிட்ட அவர், தற்போது இந்த துறையில் பணிவாய்ப்பு கொட்டி கிடப்பதாக தெரிவித்தார்.விழாவில்,
19 பட்டயப்படிப்பு 100 பட்டப்படிப்பு மாணவர்கள் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்தனர்.
%d bloggers like this: