
கோவை, பிப்.3-
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட துணைப்பொதுச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில், வக்கீல் கேஎம்.தண்டபாணி, மாநில தீர்மான குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து, வெநா.உதயகுமார், பகுதி செயலாளர்கள் மார்க்கெட் மனோகரன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உறுப்பினர் தனபால், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.