
கோவை செம்மேடு, போளுவாம்பட்டி, காருண்யா நகர், மற்றும் பழங்குடி கிராமங்களில் போலீசார் அதிரடி சோதனை, சட்ட விரோதமாக வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் காலாவதியான விஷாவுடன், வெளிநாட்டவர் சட்ட விரோதமாக தங்கிருப்பதாக, செம்மேடு, காருண்யா நகர், பழங்குடியின மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் துறையினர் செம்மேடு, போளூவாம்பட்டி, மத்துவராயபுரம், காருண்யா நகர் மற்றும் பழங்குடி கிராமங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தலா 10 காவலர்கள் அடங்கிய 10 குழுக்களாக 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 50 பெண் காவலர்களும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவரும், வீடு வீடாக சென்று சட்டவிரோதமாக யாரேனும் உள்ளனரா என தீவிரமாக சோதனையிட்டனர்.