
கோவை குறிச்சி குளத்தில் முதியவர் பிணம் ஒன்று மிதப்பதாக போத்தனூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் இறந்து போன முதியவருக்கு 70 வயது இருக்கும். 2 நாட்களுக்கு முன்பு தலையில் மொட்டை அடித்திருக்கிறார். சாம்பல் கலர் சட்டையும் மற்றும் பேண்ட் அணிந்து இருக்கிறார். அக்கம் பக்கத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவரா ? அல்லது வெளியூரில் இருந்து வந்தவரா? என்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.