
கோவை குனியமுத்தூர் மூர்த்தி நகரை சேர்ந்த 42 வயது நபர் குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதிக்கு பஸ்சில் வந்தார். அப்போது பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவரது அருகில் இருந்த ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சை நிறுத்தி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு பஸ் நிறுத்தத்தில் சாதாரண உடையில் இருந்த சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் உமா மற்றும் போலீசார் பூபதி, கார்த்தி அந்த நபரை துரத்தி மடக்கி பிடித்தனர்.பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை அந்த நபர் சொன்னது போலீசாரை திகைத்திட வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது பெயர் ஆறுமுகம் என்கிற போண்டா ஆறுமுகம் (55). கோவை செல்வபுரம் அரசமரம் வீதியை சேர்ந்தவன். எனது தொழில் திருட்டு மட்டும் தான். வேறு எந்த வேலைக்கும் சென்றது இல்லை. நான் எனது முதல் திருட்டை 14 வயதில் தொடங்கினேன்.அப்போது போலீசார் என்னை கைது செய்து கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன் பின்னர் வெளியே வந்த நான் திருட்டை தொழிலாக தொடங்கினேன்.
முதல் முதலில் போண்டா திருடியதால் என்னை போ ண்டாஆறு முகம் என அழைக்க தொடங் கினர். அது நன்றாக இருந்ததால் நானும் அந்த பெயரை வைத்து கொண்டேன். எனது பெரும் பாலான திருட்டு பஸ்சில் மட்டும் தான்.
பஸ்சில் திருடிவிட்டு சுலபமாக தப்பி விடலாம். இதனால் எனது முதல் தேர்வு பஸ் தான். பஸ்சில் செல்லும் போது டிப்டாப்பாக செல்வேன். கூட்டமாக இருக்கும் போது பெண்கள், முதியவர்கள், ஆண்கள் ஆகியவர் களிடம் இருந்து எது கிடைத் தாலும் திருடி கொள்வேன்.
பள்ளி, கல்லூரி மாணவர் களிடமும் திருடுவேன். திருடி கிடைக்கும் பொருட் களை விற்று அந்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்வேன். மது, கஞ்சா குடித்தும், மசாஜ் மற்றும் பெண்களுடன் உல்லா சமாகவும் இருந்து வந்தேன். 14 வயதில் திருட்டை தொடங்கி னேன். தற்போது எனக்கு 53 வயதாகிறது. 39 வருடங்களாக திருட்டை தொடர்ந்து வருகிறேன். நூற்றுக் கணக்கான திருட்டில் ஈடுபட்டு ள்ளேன். போலீசாரிடம் மாட்டாமல் தப்பிக்க பார்ப்பேன்.
ஆனால் எப்படியாது போலீசார் என்னை பிடித்து விடுவார்கள். இதுவரை 99 முறை சிறைக்கு சென்றுள்ளேன். இன்று 100-வது முறையாக சிறைக்கு செல்ல உள்ளேன். என சிரித்து கொண்டே கூறினார்.இதையடுத்து ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.