கோவையில் நடைபெற்ற அதிமுக தெற்கு வடக்கு மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் திமுகவைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இருந்து நான் விலகி திமுகவில் இணைய போவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் எம்ஜிஆர் வழி வந்த நான் அதிமுகவுக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று கூறினார் மேலும் அவர் பேசும்போது கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆட்சியை நடக்கிறது அதனால் திமுகவை சேர்ந்தவர்கள் பயந்து போய் இப்படி எல்லாம் வதந்தியை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்