
கோவையில் நேற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொள்ள வருகை புரிந்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, இன்று காலை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் காவலர்கள் எத்தனை பேர் என்று பணிக்கு வந்துள்ளார்கள் என்பதனை கேட்டறிந்த டிஜிபி பொது நாட்குறிப்பு குற்ற வழக்குகளின் நிலை போன்றவற்றினை ஆய்வு செய்தார், மேலும் கைதிகளின் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டு காவல் நிலைய ஆய்வாளர் இடம் ஆலோசனைகளையும் வழங்கினார், மேலும் பணியில் இருந்த காவலர்களிடம் நிறை, குறைகளையும் கேட்டறிந்தார் .தமிழக காவல்துறை தலைவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டது அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு உற்சாகத்தையும் ஒருவித பதட்டத்தையும் ஏற்படுத்தியது.