கோவை,
கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வந்த பழ. அரவிந்தன் என்பவருக்கு சொந்தமான குடோனில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வைத்திருந்தார் அந்த இயந்திரத்தில் இருந்து நூதனமான முறையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்களை அரவிந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் திருடி விற்றுவிட்டதாக இளமாறன் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .புகாரின் பேரில் கோவை போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி அரவிந்தன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இளமாறனுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜேக்கப் என்பவர் மீது கோவை சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளமாறன் புகார் அளித்துள்ளார் .அந்த புகாரில் தனது நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் பணிபுரிந்து வந்ததாகவும் தான் இயந்திரங்கள் வாங்குவதற்காக வெளிநாடுகள் சென்ற சமயத்தில் தனக்கு தெரியாமல் ஏராளமான உதிரி பாகங்களை எடுத்து விற்று விட்டார் .மேலும் அரவிந்தன் நூதன முறையில் உதிரி பாகங்களை திருடி விற்றதை போல ஜேக்கப் அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களை சேர்த்துக்கொண்டு கணக்கு வழக்குகளில் மோசடி செய்து சுமார் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இந்த மோசடி செயல்கள் குறித்து விசாரித்த போது சரியான முறையில் பதில் அளிக்காமல் தற்போது சிங்காநல்லூர் பகுதியில் தனியாக ஜவுளி இயந்திரங்கள் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தை பல லட்ச ரூபாய் முதலீட்டில் துவக்கியுள்ளார் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் .இதை தொடர்ந்து சூலூர் போலீசார் புகாரை பதிவு செய்து ஜேக்கப் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது
கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த கங்கோத்ரி மில் பூட்டப்பட்டு இருந்த சமயத்தில் உள்ளே புகுந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை நூதன முறையில் ஒரு கும்பல் திருடி விற்க முயன்றது. அதை போலீசார் சரியான நேரத்தில் விசாரணை நடத்தி அந்த கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல தற்போது கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு ஜவுளி மில்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களில் விலை மதிப்புள்ள எலக்ட்ரானிக் உதிரிபாகங்களை நூதன முறையில் திருடும் கும்பல் குறித்தும் விசாரித்து வருவதாகவும் அந்த கும்பலுக்கும் ஜேக்கப் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.