
கோவை,
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானவர் . கார் வெடிப்பு சம்பவம் விபத்தை கடந்து அசம்பாவிதத்தின் பின்னணியில் சதி திட்டம் தீட்டியது தனிப்பட்ட விசாரணையில் அம்பலமானது. இந்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜமேஷா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது ஜமாத்துகள் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய முயன்ற நபரை அடைக்க செய்ய முதலில் மறுத்திருக்கின்றனர். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் முபின் உடல் அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிலையில் முபின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது குறித்து தகவல் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அதனை கிஷோர் கே. சாமி ரீ டுவிட் செய்தார். இது இரு சமூகத்தின் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக. கோவை சிட்டி சைபர் கிரைம் போலீஸார் கிஷோர் கே. சாமி மீது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கிஷோர் கே சாமியை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நான்கில் நீதிபதி சரவணா பிரபு முன்பாக சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஆஜர் படுத்தி இரண்டு நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க கோரி மறு தாக்கல் இருக்கின்றனர்.