
கோவை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் கட்சி பிரமுகர் இல்ல திருமணம் உள்பட விழாவில் கலந்து கொள்வதற்காகவும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கார் மூலம் ஈரோடுக்கு புறப்பட்டு செல்கிறார்.
கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நா.கார்த்திக் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்), ரவி (வடக்கு மாவட்ட செயலாளர்). தளபதி முருகேசன் (தெற்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் செய்து வருகிறார்கள்.