பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி சார்பில்  திடக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு 

கோவை, 

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள், கோவை மாநகராட்சி மற்றும் அவிரா பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

 கோவை மாநகராட்சி 15-வது வார்டில்  நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களிடம் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, திடக் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் துவங்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களின் ஸ்மார்ட் போன்களுக்கு குறுச்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, அப் பகுதியை மாணவர்கள் தூய்மை செய்தனர். இதில் 15வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி பச்சைமுத்து, சுகாதார ஆய்வாளர் த.ஜெகநாதன், விஸ்ஷுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் ஜி. ராதா, அவிரா பவுண்டேஷன் தலைவர் ஐஸ்வர்யா தேவ் உள்பட பலர் பங்கேற்றனர்.