கோவைக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

 

கோவை, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை இன்று காலை வந்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் , ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம்.மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறித்து பேசிய அவர், அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். போலீசார் இதைபாடமாக வைத்துக் கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும். சட்டசபையில் அதிமுகவின் இருக்கை பிரச்சனை தொடர்பான பதில் அளித்த அவர், இது கட்சி சார்ந்த பிரச்சினை மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.கோவை மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசிய அவர், இந்தியாவில் உள்ள பின்னலாடை தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது.தற்போது 40% ஆர்டர் குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களுக்கு ஆழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 90% பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திகடவு அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிக்கவில்லை. பரம்பிகுளம் அனை 2 டி.எம்.சி நீர் வீணாகியுள்ளது.இனி இது போன்று நடக்க கூடாது.செங்கல் சூளைகளுக்காக செம்மண் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவைக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். அதற்கான தேவை உள்ளது. பின்னர் தீபாவளி தினத்தன்று மது கடைகள் திறந்து வைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மதுக்கடைகளுக்கு இலக்கு வைத்து விற்பனை செய்வது விட மாணவர்கள் குழந்தைகளுக்கான கல்வி தடுப்பூசிகளுக்கு விலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்தவேண்டும், பாண்டியாரு புன்னம்புழா, நல்லாறு பாம்பாறு திட்டம் செயல்படுத்த வேண்டும்.சட்டமன்றம் 100 நாட்கள் நடக்க வேண்டும், அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும்.போதை கலாச்சாரம் தடை செய்ய வேண்டும் போதுமான காவலர்கள் இல்லை ஆகையால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பண்டிகை காலம் என்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் நிறுவன பால் விலையை குறைக்க வேண்டும் ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்துள்ளனர் ஒரு ஆண்டில் நாலு முறை விலை உயர்த்தபட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.