கஞ்சா சாக்லெட் விற்ற வடமாநில வாலிபர் கைது

கோவை, அக்.16-
கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போலீசார், சட்டரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கணபதி சரவணம்பட்டி ரோட்டில் வாலிபர் ஒருவர் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், வாலிபரை ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பஹானி சங்கர் க்லார்(37), என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் 3.6 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.