
கோவை,
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை சோதனை அடிப் படையில் கோவை, பெரம்பலூர் மாவட்டங் களில் அமல்படுத்த வேண்டும் என்று டாஸ் மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர் பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்கு மார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட ஐகோர்ட்டு சிறப்பு டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. மலைப்பிரதேசங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட் டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்று, பின் காலி பாட்டில்களை ஒப்படைக்கும்போது அந்த கூடுதல் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று இந்த சிறப்பு பெஞ்சு ஏற்க னவே உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், காலி மதுபாட்டில் களை திரும்பப்பெறும் திட்டத்தை கொடைக் கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல் லிமலை, மேகமலை, டாப்சிலிப் போன்ற மலைப்பகுதிகளில் தமிழக அரசு அமல்படுத் தியுள்ளது.
இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து விளக்கமளிக்க அர சுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் அவ்வாறு அமல்படுத்துவதில் பல்வேறு சிக் கல்கள் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகி யோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது டாஸ்மாக் தரப்பில்ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘முதலில் ஒரு மாவட்டத்தில் இத்திட்டத்தை சோதனை முறையில் அமல்ப டுத்தி, அதன் முடிவுகளை பார்த்து பிற மாவட்டங்களில் அமல்படுத்த டாஸ்மாக் நிர் வாகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப் படையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் நவம்பர் 15-ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும். 2 மாதங்க ளுக்கு பின்னர் அதுகுறித்த அறிக்கையை டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்ய வேண் டும். விசாரணையை வருகிற ஜனவரி 24 ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தர விட்டனர்.