
கோவை :
கோவை நேரு ஸ்டேடியத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் போல்ட் வால்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் குதிக்கும் பஞ்சு மெத்தை (காட்டன் மேட்) கிழிந்து கிடப்பதால், எலும்பு முறிவு ஏற்படும் அச்சத்தில் வீரர்கள் உள்ளனர்.
கோவை நேரு ஸ்டேடியத்தில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சமீபத்தில், பள்ளிகளுக்கான குறுமையப் போட்டிகள் நடந்தன.நீளம் தாண்டுதல் மற்றும் போல்ட் வால்ட் போட்டியில் கலந்துகொண்டு தாவும் வீரர்கள் பயன்படுத்தும் பஞ்சு மெத்தை கிழிந்து கிடக்கிறது. மேலிருந்து கீழ் தாவி வரும் வீரர்களுக்கு காலில் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த பழைய மெத்தையை மாற்றி, புதிதாக அமைக்க அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்