கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இனிப்பு கார வகைகளை விற்பனை செய்யும் ஒரு கடையில் ஒருவர் இனிப்பை வாங்கி ரூபாய் 500 கடைக்காரரிடம் கொடுத்து மீதி தொகையை கேட்டுக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் அதேபோல் வந்து வேறொரு பொருளை எடுத்து அவரும் ஐநூறு ரூபாய் கொடுப்பது போல் நடித்து எனக்கும் மீதி தொகை வர வேண்டி உள்ளது என்று கூறி மீதி பணத்தை வாங்கிச் செல்கிறார். இந்நிலையில் கடைக்காரருக்கு நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என தெரியவர அவர் உடனே தனது கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது மூன்று பேர் சேர்ந்து வெறும் 500 ரூபாய் கொடுத்து பொருளை வாங்கிக்கொண்டு தன்னிடமிருந்து ஆயிரம் ரூபாய்க்கான மீதி தொகையை வாங்கி செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது மற்றொரு கடையில் தான் ஏமாற்றப்பட்டதை கூறும்போது அங்கும் இதுபோல மூன்று பேர் வந்து பணத்தை நூதன முறையில் ஏமாற்றி சென்றுள்ளது . நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள கடைக்கு சென்ற மோசடி கும்பலை சேர்ந்த ஒரு நபர் ஏற்கனவே கையில் வைத்திருந்த பத்து ரூபாயை சில்லரை கொடுத்த தொகையுடன் சேர்த்து கூடுதலாக கொடுத்து விட்டதாக திருப்பிக் கொடுத்து கடையில் இருந்த பெண்மணியை எண்ணிப் பார்க்க சொல்கிறார் .அதன் பிறகு 200 ரூபாயை அதிலிருந்து எடுத்து இரண்டு 100 ரூபாய் வேண்டும் என கேட்டு அதற்கும் சில்லறை வாங்குகிறார் .அதன்பின்பு ஏற்கனவே தயாராக இருந்த நபர் கொடுக்காத 500 ரூபாய்க்கு சில்லறையை வாங்கி செல்கிறார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது .எனவே கடை உரிமையாளர்கள் இதுபோன்ற நூதன மோசடி செய்யும் நபர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஏமாந்தது 500 ரூபாய் தான் என்றாலும் ஒரு கடைக்கு 500 ரூபாய் என ஒரே நாளில் அவர்கள் 50 கடைகளில் ஏமாற்றினால் 25 ஆயிரம் ரூபாய்…
மாதத்திற்கு இந்த கும்பல் சர்வசாதாரணமாக ஏழு முதல் எட்டு லட்ச ரூபாயை நூதன முறையில் ஏமாற்றி செல்கிறது இந்த கும்பல். வெள்ளை நிற டாட்டா சுமோ காரில் வந்து சென்றதாக கடையின் உரிமையாளர் கூறினார்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என சொல்வார்கள்…ஆனால் இப்படி அப்பாவி போல வந்து ஏமாற்றும் கும்பலிடம் இருந்து வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த செய்தி தொகுப்பு…
%d bloggers like this: