கோவை, 

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த நர்சை கணவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த வினோத். இவரது மனைவி நான்சி. 

நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். 

இவர் வேறு ஒருவருடன் பேசி வருவதாக வினோத் சந்தேகித்துள்ளார். 

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இன்று  நான்சி வழக்கம் போல் மருத்துவமனைக்கு பணிக்கு சென்றார். அவரை அவரது கணவர் வினோத் பின் தொடர்ந்து சென்றுள்ளார். 

இதனிடையே மருத்துவமனை வளாகத்திற்குள்ளே வைத்து தான் கொண்டு வந்த கத்தியால் நான்சியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். 

இதையறிந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், மனைவியை சரமாரியாக குத்திய நிலையில், வினோத்திற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் நான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் வினோத்தை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.