கோவை,

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் .அப்போது இடையர் வீதி பகுதியில் சில நபர்கள் பொது இடத்தில் பிறந்தநாள் விழா  கொண்டாடுவதும், பிறந்தநாள் கேக்கை கூர்மையான கத்தியை வைத்து வெட்டி கொண்டாடுவது போன்ற வீடியோ அவரது செல்போனுக்கு வந்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாரியப்பன் விரைந்து சென்றபோது அங்கு சில நபர்கள் பிறந்தநாள் கொண்டாடியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அசோக் குமார் (30), வடவள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் தினேஷ் குமார்( 23), செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் அரவிந்த் குமார் (27 ),காந்தி பார்க் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் பார்த்திபன்( 26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.