கோவை,
கோவை மாநகராட்சியில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய ஆகிய 5 மண்டலங்கள் உள்ளன. இதில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 61-வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்குள் அந்த பகுதி தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் புகுந்து தூய்மை பணியாளர்களை நான் கூறும் இடத் திற்கு சென்று பணி செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார பணியாளர்கள் கூறிய தாவது:
கோவை மாநகராட்சி 61வது வார்டில் உள்ள சுகதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு காலை 6 மணிக்கு அந்த பகுதி தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த சுகதார ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தூய்மை பணியாளர்க ளுக்கான வருகைப்பதிவேட்டை பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நாள் கூறும் வேலைகளை தான் நீங்கள் செய்ய வேண்டும் எனவும், தூய்மை பணி யாளர்களுக்கு இனி நான்தான் பணி ஒதுக்குவேன் என்று அதிகார தொனியில் எங்களை மீரட்டும் விதமாக கூறினார்.
எங்களுக்கு சுகாதார ஆய்வாளர், மண்டல ஆய்வாளர்கள் வழக்கமாக பணி ஒதுக்கீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வார்டு கவுன்சிலரின் கண வர் என்ற முறையில் எங்களை மிரட்டும் தோனியில் பேசியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவித்து உள் ளோம். எனவே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார். இதுகுறித்து திராவிட மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;
எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் என்னி டம் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை முறையாக அகற்றுவது இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து எங்கள் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ளும்படி கூறுவதற்காகத்தான் பொதுமக்களில் ஒருவராக அங்கு சென்றேன், அந்த அலுவலகத்தில் போதிய இருக்கை கள் இல்லாதால் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு அவர்களிடம் கூறினேன். ஒருசிலர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லாமல் இருக்கின்றனர்.
எனவே அதனை சரிபார்த்தேன். தூய்மை பணியாளர்களுக்கு நான் எவ்வித மிரட்டலும் விடுக்கவில்லை. பொதுமக்களில் ஒருவனாக சென்று செயல்பட்டேன் என்றார்.
%d bloggers like this: