இந்துக்களை இழிவாக பேசிய ஆ.ராசா
படத்துக்கு செருப்பு மாலை :கோவையில் பரபரப்பு
கோவை,
ஹிந்துக்களை இழிவாக பேசிய திமுகவை சேர்ந்த நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை கண்டித்தும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வலியுறுத்தியும் துடியலூரில் ஹிந்து இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆ ராசாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து செருப்பால் அடித்தனர்.. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது