ஹரி ஓம் இந்து சேவா சங்கம் சார்பில் விஸ்வகர்மா குபேர மஹா திருவிளக்கு பூஜை 

கோவை,விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு  கோவை பெரிய கடை வீதி காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் விஸ்வபிரம்ம ஆராதனை பெருவிழா நடைபெற்றது .இதனை தொடர்ந்து ஸ்ரீ ஹரி ஓம் இந்து சேவா சங்கம் சார்பில்  திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  அதில் ஸ்ரீ ஹரி ஓம் இந்து சேவா சங்கம் சார்பில் ஐந்தொழில் புரியும் விஸ்வகர்மா மக்கள் கொல்லர்,தச்சர்,  சிற்பி, பொற்கொல்லர் இவர்களின் குடும்பங்கள் நீண்ட ஆயுள், உயர் புகழ் , தொழில் விருத்தி, நிறைவான செல்வம், மகிழ்வான வாழ்வு, பெற வேண்டியும் உலக மக்கள் சகல ஐஸ்வரியத்துடன் நன்மை வேண்டி ஸ்ரீ விஸ்வகர்மா குபேர மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில்  நிறுவனர் பொன்மணி ஆச்சாரியார் வழிகாட்டுதலின்படி மாநில தலைவர் அன்னூர் மூர்த்தி தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் திருக்குமார் முன்னிலையில் விஸ்வகர்மா பாதுகாப்பு பேரவையின் 

மகளிர் அணியினர் சரஸ்வதிகுமரேசன், லதா நடராஜன், சுப்புலட்சுமி, மேற்பார்வையில் 302 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக ஆன்மிகச் செம்மல்  செல்வமணி அருணகிரி கலந்து கொண்டார் 

விழாவிற்கு  சங்கத்தின் நிர்வாகிகள் பொருளாளர். பழனிமுருகன், புளியம்பட்டி நகரத் தலைவர் கந்தவேலு நன்றி கூறினார் .