
கோவை,
கோவை பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் (எப்.டி.எப்.) துணை தலைவர் கிருஷ்ணா சாம்ராஜ் மற்றும் கண்காட்சியின் ஒருங்கி ணைப்பு குழு தலைவர் பழனிசாமி ஆகியோர் கூறியதாவது
கோவை பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் (எப்.டி.எப்.) சார்பில் கோவையில் முதல்முறையாக இன்டர் பவுண்டரி, இன்டர் டைகாஸ்ட் என்ற பெயறில் பவுண்டரி கண்காட்சி கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கோவையில் சுமார் 1000 பவுண்டரிகள் உள்ளன. நாட்டில் தயாரிக்கப்படும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் அனைத்திலும் கோவையில் உள்ள பவுண்டரி களில் செய்யப்படும் பொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பவுண்டரி தொடர்பான அனைந்து உபகரணங்களும், பொருட்களும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. கோவையை சேர்ந்த 60 நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் ஜெர்மனி, சீனா, செக்கோஸ்லேவியா, ஜப்பான் உள்ளிட்ட 180 முன்னணி தொழில நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
15 மற்றும் 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், 17-) தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்காட்சி நடையெ ம், பார்வையாளர்களுக்கு அமைதி இலவசம், கண்காட்சி தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் (டி.ஐ.ஐ.சி.) கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினராக சக்தி குருப் தலைவர் மற் றும் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் (டி.ஐ.டி.சி.ஓ.) இயக்குனர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கி றார்கள்.
பவுண்டரிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும். இந்த தொழிலில ஈடுபடும் கடைநிலை ஊழியர்களின் உற்பத்தி திறனையும். தரத்தையும். அறிவு பகிர்தலையும் மேபடுத்துவதே கண்காட்சியின் முக்கிய நோக்கம். இக்கண்காட்சியியில் தொழில் நுட்பம், வார்ப்படம் குறித்த செயல்முறை அடங்கிய 33 டெக்னிக்கல் பேப்பர் கலந்தாய்வும் இதில் இடம்பெறு கிறது. இக்கண்காட்சி அடுத்ததாக 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 முதல் 24-ந் நேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.