கோவை அடுத்த கோவைப்புதூர், அறிவொளிநகரை சேர்ந்தவர் 37 வயது பெண்.இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை ஆலோசகராக பணி யாற்றி வந்தார். இவருடைய கணவர் இறந்ததால் 2-வது திருமணம் செய்ய விரும்பி ஆன்லைன் மூலம் திருமண தகவல் மையத்தை அணுகி விவரங்களை பதிவு செய்தார்.
இதையடுத்து ராமு என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, தான் சுங்கத்துறை யில் இணை ஆணையாளராக பணியாற்று வதாகவும், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதால் திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 17-ந்தேதி ராமு சுங்க இலாகா அதிகாரி போல் சீருடை அணிந்து சென்று கோவைப்புதூர் பெண்ணை சந்தித்து பேசினார். அதை பார்த்த அந்த பெண் ராமுவை நம்பியுள்ளர். இதையடுத்து அவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.இதற்கிடையில் அந்த பெண்ணை கடைக்கு அழைத்து சென்று ரூ.50 ஆயிரத்துக்கு துணி மற்றும் பல்வேறு பொருட்களை ராமு வாங்கி னார். இதற்காக அந்த பெண்ணிடம் ரூ.25 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் ராமு பெற் றார். அதன்பிறகு அந்த பெண்ணுடன் பேசு வதை தவிர்த்தார். இதனால் அந்த பெண் சுங்கத்துறையை அணுகி ராமு என்பவர் பணியாற்றுகிறாரா? என்று விசாரித்தார். அப்போது அது போல யாரும் பணியாற்ற வில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி அதிகாரி என்று கூறிய வர் சின்னதடாகத்தை சேர்ந்த என்ஜினீயர் ராமு என்பது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மனைவி கைது
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசார ணையில், இந்த மோசடிக்கு ராமுவின் மனைவி லட்சுமியும் (34) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லட்சமியும் கைது செய்யப்பட்டார். கைதான ராமு சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந் தது. அவர் இது போல் மேலும் பல பெண் களை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படு கிறது. ராமுவின் வீட்டில் இருந்து போலி அதி காரியாக நடிக்க பயன்படுத்திய சீருடைகள், அடையாள அட்டை ஆகியவற்றை குனியமுத் தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமணம் செய்வதாக மோசடி
%d bloggers like this: