கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு
ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி
கோவை,
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ டிரைவரான இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம்ல் 2500 ரூபாய் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராமல் இவரது கண்க்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனையடுத்து வடவள்ளி பகுதியில் தான் கணக்கு வைத்து உள்ள இந்தியன் வங்கிக்கு சென்று மேலாளரிடம் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்காமல் அழைக்க்ழித்ததாக கூறப்படுகிறது. பல முறை கேட்டும் எவ்வித விளக்கம் அளிக்கபடாமல் வங்கி கணக்கிற்கு பணம் மீண்டும் வராமல் இருந்ததால் மன உளைச்சலான இவர், இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இது குறித்து மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்த காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து மண்ணெனையை பிடுங்கி விசாரித்து விட்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான ஏற்பட்டது.
%d bloggers like this: