
கோவை கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ( 24).
கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் ரஞ்சித் குடிபோதையில் வீட்டுக்கு
வந்தார். அப்போது அவர் சிகரெட்டை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராத
விதமாக தீ அவரது உடையில் பற்றியது. தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை
கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து ரஞ்சித்தை மீட்டனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.