கோவை,
கோவை அவிநாசி ரோடு நீலம்பூர் பைபாஸ் சாலையில் சங்கமித்ரா பார்ம் உள்ளது இங்கு ஒட்டகங்களைக் கொண்டு பால் பொருள்கள் விற்பனை செய்யும் ஒட்டக பால் பண்ணையை மணிகண்டன் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஒட்டகங்கள் தவிர குதிரை, முயல், வாத்து, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டு வருகின்றன. காலை,மாலை வேளைகளில் ஒட்டகத்திலிருந்து பால் கறந்து நேரடியாக ஒட்டகப்பால் டீ விற்பனையும் நடைபெறுகிறது. இந்த ஒட்டகப்பால் டீ சாப்பிடுவதற்காக கோவை மக்கள் அந்த பகுதியில் அதிகளவில் குவிந்திட்டு வாராங்க .
நாம் சாதாரனமாக டீ குடிக்கும் டீ யின் விலை 10 ரூபாய் இங்கோ ஒட்டகப்பால் டீயின் விலையோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் மணிகண்டன் கூறும்போது, குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்டத்தில் இருந்து ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், எல்லா சூழலிலும் வாழக்கூடிய வகையில் ஒட்டகங்கள் இருப்பதால் இங்கு சிரமமின்றி பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் இங்குள்ள ஒட்டகங்களில் இருந்து கறக்கப்படும் பாலைக் கொண்டு பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த ஒட்டக பால் குடிப்பதால் கேன்சர் உட்பட பல நோய்களை குணப்படுத்த இயலும் என்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு குணமளிக்க கூடியது என்றார்.அதேபோல சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் வெகுவாக குறைக்க இந்த ஒட்டக பால் பயன்படுகிறது என்றார். மேலும் ஒட்டகப்பால் டீ குடிக்க நிறைய பேர் ஆர்வமாக வருவதாகவும் கூறினார்.
மேலும் முழு சிறப்பு நேர்காணல் வீடியோவில் …
%d bloggers like this: