கோவை,
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க 2022 உட்கட்சி தேர்தல் நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் , மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உட்கட்சி அமைப்பு தேர்தல் மண்டல பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் ,
மாவட்ட தேர்தல் ஆணையாளர் வழக்கறிஞர் முருகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆய்வு மேற்கொண்டாரகள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் சண்முகவடிவேல் வரவேற்புரை கூறினார், கூட்ட முடிவில் மாவட்ட கழக துணை செயலாளர் பாபு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் ஜாகிர்உசேன், கணுவாய்ராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஆரோக்கியசாமி, சாகுல்அமீது, மலைராஜ், கவுண்டம்பாளையம்
பகுதி செயலாளர் ராஜு, சாய்பாபா காலனி பகுதி செயலாளர் தவசிமுருகன், காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜசேகர், வடவள்ளி பகுதி செயலாளர் விஜயகுமார், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா, பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமணாசரத், காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் தாயனூர்ரகு மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சோமசுந்தரம்,
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பொருளாளர் மோகன்ராஜ், நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் தாஸ்,பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளரகள் காலனிராஜா, மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாகமாணிக்கம், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் காளிமுத்து, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் மனோகர், மாவட்ட தொண்டர் துணைச் செயலாளர்கள் ராஜா, காஜாஉசேன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கண்ணப்பன், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி கோவிந்தன் பகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட ,கிளைகழக செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் திரளான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்