உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகள் முதலிடம் வகிப்பது கீரைகளும் காய்கறிகளும் தான்… இந்த கீரைகள் பொதுவா நம்ம தெருவுல வண்டியில வச்சு வித்துட்டு போவாங்க… அதே மாதிரி நம்ம பக்கத்துல இருக்க கடைகள்ல இந்த கீரைகள் கிடைக்குது.. ஆனா இந்த கீரைகள் எப்படி விளைவிக்கப்பட்டு வருகிறது, சுத்தமா இருக்கா தரமான முறையில் சுகாதாரமான முறையில இது விளைவிக்கப்பட்டு இருக்கா, அப்படின்னு நாம பார்த்தா நிச்சயம் அந்த கீரைகளை நாம சாப்பிட முடியாது … ஏன்னா அந்த கீரைகள் விளையக்கூடிய சுற்றுப்புற சூழல் பெரும்பாலும் சரியில்லாமல் தான் இருக்கும்… அப்ப நாம சாப்பிடுற கீரை சத்தானது இல்லையா அப்படின்னு ஒரு சந்தேகம் நமக்கு வரும்… சத்தானது தான்…
ஆனா அந்த கீரைய கூட உண்மையான முழுமையான சத்துக்களோட சாப்பிட்டோம்னா கீரை சாப்பிடுவதோட முழுமையான பலன் வந்து நமக்கு கிடைக்கும்…
அதை நாம எங்க போய் வாங்குறது அப்படின்ற ஒரு கேள்வி எல்லாத்துக்கும் வரும் …

அப்படி நாம தேடிய கேள்விக்கு கிடைத்த விடை தான் கிரீன்சீ…

கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு போற சாலையில் திருமலையாம்பாளையத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் அழகான ஒரு பண்ணை அமைச்சு தரமான முதல் தரமான கீரைகளை பறிச்ச சில மணி நேரத்துலையே நம்ம வீட்டுக்கு டோர் டெலிவரி கொடுக்கிறாங்க…

2021 மே மாசம் துவக்கப்பட்டது இந்த கிரீன்சீ நிறுவனம். சிவராமகிருஷ்ணன், வினய், குமரகுரு மூணு பேரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்துட்டு விவசாயத்து மேல இருக்கக்கூடிய ஆர்வத்தினால் இந்த கிரீன்சீ நிறுவனத்தை துவக்கி இருக்காங்க…

இந்த கிரீன்சீ நிறுவனத்தின் விவசாயத்தோட சிறப்பு அம்சமே மண்ணில்லாத விவசாயம்…

என்ன ஆச்சரியமா இருக்கா…

மண்ணே இல்லாம எப்படி விவசாயம் பண்ண முடியும் அப்படின்னு கேள்வி வருதா…

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தமிழ்நாட்டில் முதல்முறையா இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி விவசாயம் பண்றாங்க…. அதன் மூலமா சுகாதாரமான முறையில சத்தான முதல் தரமான கீரைகளை இங்கே வந்து விளைவிக்கிறாங்க… இதை எப்படி எல்லாம் பண்றாங்கன்னு சிவராமகிருஷ்ணன் நமக்கு விளக்கமா சொல்றாரு…

பூச்சிக்கொல்லி போடாமல் தேவையான சத்துக்கள் மட்டும் கொடுத்து விளைவிக்கப்பட்ட பாலக்கீரை ,புதினா, பொன்னாங்கண்ணி ,புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை என எல்லா வகையான கீரை வகைகளையும் இங்க விளைவிச்சு கோயம்புத்தூர் சிட்டிக்குள்ள டோர் டெலிவரி கொடுக்கிறாங்க அழகான பாக்கெட்டுக்கு இல்ல பறிச்ச பசுமை மாறாம அப்படியே பிரஷ்ஷான கீரைகளை நமக்கு டெலிவரி கொடுக்குறாங்க… ஒரு பூச்சிக்கடியோ புழுவெட்டு எதுவுமே இல்லாம முதல் தரமான கீரைகள் இங்கே இருந்து நம்ம வீட்டுக்கு நேரடியாகவே டெலிவரி ஆகுது … மாசம் 600 ரூபா பேக்கேஜ்ல வாரத்துக்கு ஒரு முறையும் 1200 ரூபா பேக்கேஜ்க்கு வாரம் இரண்டு முறையும் பிரஸ் ஆன கீரைகளை நம்ம வீட்டுக்கு டெலிவரி பண்றாங்க…. நீங்களும் நிச்சயமா கிரீன்சீ நிறுவனத்தை தொடர்பு கொண்டு கீரைகளை வீட்டுக்கே வாங்கி ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்…