விருதுநகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 34). இவர் கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர்
பகுதியில் தங்கி அங்குள்ள மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம்
ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் கடந்த 4 மாதங்களாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அப்போது
சுரேஷ்குமாருக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த
இளம்பெண் கோபித்து கொண்டு சுரேஷ்குமாரை பிரிந்து சென்றார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.
நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை
செய்து கொண்டார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
%d bloggers like this: