கோவில் மேற்கூரை விழுந்து
சிறுவன் உட்பட இருவர் சாவு

கோவை மாவட்டம்
பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் எட்டிதுரை மாரியம்மன் கோவில் மேற்கூரை விழுந்து சிறுவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் மூன்று பேர் படுகயங்கலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள காளியாபுரம் எட்டித்துறை உப்பாற்றங்கரையில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலை முதல் இப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் காளியாபுரத்தில் இருந்து உப்பாற்றுக்கு குளிக்கச் சென்ற நிர்மல், நித்திஷ், ஹரி கோபால் என்கின்ற பிரபு மற்றும் இப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நடராஜ் ஆகிய ஐந்து பேரும் மழைக்கு கோவிலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர் .அப்போது எதிர்பாராத விதமாக கோவில் மேல்கூரை இடிந்து நின்று கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் இடிபாட்டில் சிக்கி ஹரி(11) மற்றும் நடராஜ் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் விபத்தில் சிக்கி காயமடைந்த நித்திஷ்,நிர்மல் மற்றும் கோபால் என்கின்ற பிரபு மூன்று பேரை பொதுமக்கள் மீட்டு வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு பலியான நடராஜ் மற்றும் ஹரி இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அறிந்து வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.