விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை

கோவை மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் உலக நலன் வேண்டி விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.உலக நலன் வேண்டி நிலவேம்பு சித்தர் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் 18 திவ்ய திரவியங்கள் அபிஷேக பூஜை 1008 மலரட்சனை போன்றவைகள் சிறப்பாக நடைபெற்றன.விநாயகர் பெருமானுக்கு கொழுக்கட்டை இனிப்பு மோதகம் சுண்டல் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் தரப்பட்டன.விழா ஏற்பாடுகளை இளைய பட்டம் பாலரிஷி நாக விக்னேஸ் சுவாமிகள், தங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.