எஸ்ஆர் எண்கள் 06479/06480 பழனி-மதுரை-பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில்கள் மற்றும் எண்கள் 0646206463 பழனி-கோவை-பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில்கள் ஒன்றிணைந்து மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண் 16722 மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோவை சென்றடையும்.
எண் 16721 கோயம்புத்தூர் – மதுரை எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூரில் இருந்து மதியம் 2:05 மணிக்கு புறப்பட்டு இரவு 7:35 மணிக்கு மதுரை சென்றடையும்.
இந்த ரயில்கள் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி கொடை ரோடு , திண்டுக்கல் சந்திப்பு, அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 12 பொது இருக்கை பெட்டிகள் மற்றும் 2 எஸ்எல்ஆர் பெட்டிகள் இருக்கும். இந்த விரைவு ரயிலின் முதன்மை பராமரிப்பு மதுரையில் இருக்கும். இது டீசல் இன்ஜின்கள் மூலம் இழுத்துச் செல்லப்படும் என ரயில்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
பழனி-பொள்ளாச்சி ரயில்பாதை மாற்றும் பணிக்காக 2009ல் மூடப்பட்டு, 2014ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.ஆனால், மதுரை-கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் உட்பட, இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த மீட்டர் கேஜ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
%d bloggers like this: