சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு லட்ச ரூபாய் மோசடி

கோவை சுந்தராபுரம் அடுத்த லட்சுமணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மகன் குமார் (31). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரை பெங்களூருவை சேர்ந்த திப்பு என்பவர் தொடர்பு கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஏசியன் ஃப்ளவர்ஸ் நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் விசா மற்றும் டிக்கெட் செலவு களுக்காக ஒரு லட்ச ரூபாய
கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் .இதை நம்பிய மதன் குமார் திப்புவின் வங்கி கணக்கு ரூபாயை அனுப்பி உள்ளார் .ஆனால் பணம் அனுப்பி வெகு நாட்களாகிய மதன் குமாருக்கு வேலை கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து திப்பு விடம் அவர் பலமுறை பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.திப்பு பணத்தை தர மறுத்துள்ளார் .இதை தொடர்ந்து மதன்குமார் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் .புகாரின் பேரில் போலீசார் பெங்களூருவை சேர்ந்த திப்பு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.