கள்ளக்காதல் விவகாரம்:
கணவனை தாக்கிய மனைவியின் உறவினர்கள் மீது வழக்கு

கோவை செல்வபுரம் அடுத்த முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் முஹம்மது முஹ்யித்தீன் என்பவரின் மகன் லத்தீப்(42). இவர் பெரிய கடை வீதி பகுதியில் உள்ள அரிசி கடையில் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி போனில் பலருடன் பேசிக்கொண்டு இருப்பது வழக்கம் .இது அவரது மனைவிக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. மேலும் லத்தீப் சகோதரர் மனைவியுடன் லத்தீப்புக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பினார். இது குறித்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லதீபின் மனைவி கோபித்துக் கொண்டு பாலக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் லத்தீப் மனைவியின் உறவினர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் லத்தீப் இடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் உருட்டு கட்டையால் அடித்து உதைத்ததில் லத்தீபிறக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்து ஓடியது . உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து செல்வபுரம் போலீசில் லத்தீப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் யூசுப்( 54 )),அப்துல் காதர் (55), சைனுலாபுதீன் (33), மன்சூர் (27) நாசர்( 45) ஆக ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.