மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
கோவை மாணவர்கள் அசத்தல்

சென்னையில் டால்பின் சிலம்பாட்டம் அகாடமி சார்பில் மாநிலப் போட்டி நடைபெற்றது.இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .இதில் தனித்திறமை, இரட்டைக் கம்பு தொடும் முறை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் கோவை அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டு ஒற்றைக்கம்பு மற்றும் தொடு முறை போட்டிகளில் கோப்பைகளை வென்றனர் .இந்த போட்டியில் கோயம்புத்தூர் சாம்பியன்ஷிப் பட்டத்தை லக்ஷண்யா, கிரிவித், புகழ், யாழினி, சன்ஜித், தியானேஸ், ஜஸ்வந்த், சங்கீர்த், அஸ்வின், ஐடிசஹானா அன்ஷிகா, அமிர்தகேஸினி ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவரும், அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் கலை வளர்மணி ஆசான் ந.கருணாகரன், தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகத்தின் துணை தலைவர் க.நாகமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.