சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது
பிராஜக்ட் பள்ளிகூடம் மூலம் சிக்கினார்

கோவை மாநகர் போலீசார் பிராஜக்ட் பள்ளிகூடம் எனும் விழிப்புணர்வு
நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தி வருகிறது.
இதில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், அவற்றில் இருந்து எவ்வாறு விடுபடுவது குற்றவாளிகளை தப்பவிட கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு
தகவல்களை போலீசார் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முதல்
நாள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், மறுநாள் 9-ம் வகுப்பு
முதல் 12-ம் வகுப்பு வரை பிராஜக்ட் பள்ளிகூடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். அப்போது முதல் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6-ம் வகுப்பை சேர்ந்த 11 வயது சிறுமி போலீசாரிடம் ஒரு தகவலை கூற வேண்டும்
என்று தெரிவித்துள்ளார். உடனே போலீசார் சிறுமியை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமி கூறியதாவது:-
நான் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனது தோழி அதே பகுல் வசித்து வருகிறார். சம்பவத்தன்று நான் எனது தோழியை சந்திப்பதற்காக சென்றேன். அப்போது தோழியின் பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று எனக்கு பாலியல்
தொல்லை கொடுத்தார் என்று கூறினார்.
இதனை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார். இதனால் நான் பயந்துபோய் யாரிடமும் சொல்லவில்லை. பிராஜக்ட் பள்ளிகூடம் விழிப்புணர்வால் தைரியமாக போலீசாரிடம் கூறினேன் என்றார். இதையடுத்து போலீசார் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராஜன் என்கிற தம்பி தாத்தா (57) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *