ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு காண்டம் பாக்கெட்டுகள் டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனம்

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று மாலை சுவிக்கி நிறுவனம் மூலம் ஆன்லைனில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு டெலிவரி ஊழியர் வீட்டிற்கு வந்து பார்சலை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பார்சலை பிரித்து பார்த்த பெரியசாமிக்கு உள்ளே இருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக காண்டம் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சுவிக்கி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார். உடனடியாக அந்த நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டு பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது. சிப்ஸ் கேட்டா ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்த அவருக்கு பார்சலில் காண்டம் பாக்கெட்டுகள் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.