சிகரெட் பிடிப்பதை தட்டி கேட்ட பள்ளி மாணவர்களுக்கு அடி

கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (42) .இவரது மகன்கள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழு மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிக்கு அருக ில் நின்று சிலர் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். மேலும் சிகரெட் புகையை பள்ளி வகுப்பறை ஜன்னலுக்குள் செல்லுமாறு ஊதிக்கொண்டிருந்தனர் .பள்ளி மாணவன் யுவராஜ் சிகரெட் புகையை பள்ளிக்குள் ஊதி விடுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதை அடுத்து பள்ளி முடிந்து யுவராஜ் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார் .அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் யுவராஜ் இடம் தகராறு செய்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியத்தின் மகன் சுதர்சன் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு நபர்களும் சுதர்சனை தாக்கினர் .அப்போது அங்கு சென்ற சுதர்சன நண்பர் சக்தி வேலையும் அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியதோடு உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தனர். இதில் சுதர்சனுக்கு கையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடியது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் சுதர்சனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த சுப்பிரமணியம் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி மாணவர்களை தாக்கியது போண்டாமணி ,ஸ்ரீ சபரி என்பது தெரியவந்தது தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.