மனைவியின் நடத்தையில் சந்தேகம்: ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

கோவை காந்திபுரம் மூன்றாவது வீதி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா என்பவரின் மகன் செந்தில்குமார் (30). இவர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார் . ஹோட்டல் உரிமையாளரான செந்தில்குமார் கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்தது . நேற்று முன்தினம் நள்ளிரவில் செந்தில்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவரது மனைவி பாண்டி செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு செந்தில்குமார் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு காந்திபுரம் 6வது வீதி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார் .மீண்டும் நேற்று காலை பாண்டி செல்வி தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ரத்னபுரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.