போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்
உடல் தகுதி தேர்வு அறிவிப்பு

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தோ்வு கோவை காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாவட்ட தோ்வு மையத்தின் துணைக் குழுத் தலைவா் வெளியிட்ட அறிக்கை: போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தோ்வு மற்றும் உடல் திறனறித் தோ்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தகுதித் தோ்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 மணிக்கும் இத்தோ்வில் கலந்துகொள்ள உள்ளது.
இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் விண்ணப்பத்தாரா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு கடிதம் பெறப்படாதவா்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்கள் தோ்வாணையத்துக்கு விண்ணப்பம் அளிக்கும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.