பஸ்ஸில் சென்ற மூதாட்டியிடம் நகை அபேஸ்

கோவை செல்வபுரம் சேரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுலைமான் என்பவரின் மனைவி மும்தாஜ் ( 65). இவர்களுக்கு கேரள மாநிலம் சொந்த ஊராகும். சுலைமானுக்கு உடல் நல கோளாறு காரணமாக சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மும்தாஜ் சென்று விட்டு போத்தனூர் வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் உக்கடம் சென்று கொண்டு இருந்தார். ஆத்துப்பாலம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்த பொழுது மும்தாஜ் கழுத்திலிருந்து ஆறு பவுன் செயினை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இதை அடுத்து மும்தாஜ் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.